பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், அரவிந்த் கேஜரிவால் ANI
இந்தியா

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார்.

DIN

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக தனது பேரவை உறுப்பினர்களுடன் பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வருடன் கேஜரிவால் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

தில்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த முறை தேர்தலில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி இம்முறை 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

1998ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 15 ஆண்டுகள் தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் இம்முறை ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. ஆம் ஆத்மி உடனான கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலில் போட்டியிட்டது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அமோக வெற்றியால் தில்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. மேலும் தில்லியைத் தொடர்ந்து பஞ்சாபிலும் ஆம் ஆத்மியின் ஆட்சி முடிவுக்கு வரும் காலம் தொடங்கிவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் தருண் சக் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் நேரில் சந்தித்து ஆலோசிக்கவுள்ளார்.

இதையும் படிக்க | தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

SCROLL FOR NEXT