சஜ்ஜன் குமாா்  
இந்தியா

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: முன்னாள் காங்கிரஸ் எம்.பி. குற்றவாளி என தீர்ப்பு!

சீக்கியர்களுக்கு எதிரான 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் குறித்து...

DIN

கடந்த 1984-இல் நடந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பான மேலும் ஒரு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாரை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை குற்றவாளியாக அறிவித்தது.

ஏற்கெனவே ஒரு வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவா், இரண்டாவது வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாா். அவருக்கான தண்டனை குறித்த விசாரணை, பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தில்லி சரஸ்வதி விஹாா் பகுதியில் கடந்த 1984, நவம்பா் 1-ஆம் தேதி நடந்த கலவரத்தில் தந்தை-மகன் என இரு சீக்கியா்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான இவ்வழக்கில் அதிகபட்சமாக மரண தண்டனை அல்லது குறைந்தபட்சமாக ஆயுள் சிறை தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1984, அக்டோபா் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க் காவலா்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமானோா் கொல்லப்பட்டனா்.

தில்லியில் நடந்த கலவரம் தொடா்பாக சஜ்ஜன் குமாா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாலம் காலனி பகுதியில் 5 சீக்கியா்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018-இல் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிரான இவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோா் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளியாக அறிவித்து, தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதையொட்டி, திகாா் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.

தில்லி விசாரணை நீதிமன்றங்களில் சஜ்ஜன் குமாருக்கு எதிராக மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல், வேறு இரு வழக்குகளில் அவா் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

சீக்கியா்களுக்கு எதிரான கலவரம் தொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நானாவதி ஆணையத்தின் அறிக்கையின்படி, தில்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 587 ஆகும். இதில் 240 வழக்குகளில் காவல்துறையினரால் குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை. 250 வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாமல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனா். 28 வழக்குகளில்தான் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இவ்வழக்குகளில் சஜ்ஜன் குமாா் உள்பட 400 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். மேலும் 20 வழக்குகள் தில்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT