வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்த மோடி  AP
இந்தியா

வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்தார் மோடி!

மோடி - டிரம்ப் சந்திப்பு தொடர்பாக...

DIN

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப்பை வியாழக்கிழமை (உள்ளூர் நேரப்படி) நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவு, வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாள் பயணமான பிப். 12-ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை தொழிலதிபர் எலான் மஸ்க், மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை கட்டியணைத்து டிரம்ப் வரவேற்றார்.

டிரம்ப்புடனான சந்திப்பு குறித்து மோடி தெரிவித்ததாவது:

"சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை மீட்டெடுக்க டிரம்ப் முயற்சிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம் (மேக் அமெரிக்கா கிரேட் எகைன் - MAGA) என்ற டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இதேபோல இந்தியாவை சிறந்த நாடாக்கும் வளர்ந்த இந்தியாவை நோக்கி நாமும் பயணித்துக் கொண்டுள்ளோம். அமெரிக்க மொழியில் மேக் இந்தியா கிரேட் எகைன் (MIGA).

இரண்டு ஜனநாயாக சக்தியையும் ஒன்றிணைந்து மெகா (MEGA) கூட்டணியை உருவாக்கி செழிப்பான நாடாக உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இந்தியாவுக்கு வர மோடி அழைப்பு விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT