நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் கோப்புப் படம்
இந்தியா

காதல் நடிகைக்கு ஜெட் விமானம் பரிசளித்த சிறைப் பறவை?

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சிறைக் கைதி சுகேஷ் சந்திரசேகர் காதல் பரிசு அளித்ததாகத் தகவல்

DIN

பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சிறை தண்டனையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் காதல் பரிசு அளித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன.

மோசடி வழக்கில் கைதாகி தில்லியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், சிறையிலிருந்தவாறே ஜாக்குலினுக்கு சுகேஷ் கோடிக்கணக்கிலான மதிப்பில் வைர நகைகள், குதிரை முதலானவை பரிசாக அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், சிறையில் இருக்கும் சுகேஷை, தான் காதலிக்கவில்லை என்று நடிகை ஜாக்குலின் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால், இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படமும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஜாக்குலினுக்கு தனியார் ஜெட் விமானத்தை, சிறையிலிருந்தவாறே சுகேஷ் பரிசளித்ததாக சமூக ஊடகங்களில் கூறுகின்றனர். மேலும், விமானத்தில் ஜேஎஃப் என்று குறிப்பிட்டு, காதல் கடிதத்தையும் சுகேஷ் அனுப்பியதாகக் கூறுகின்றனர்.

பண மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட வழக்குகளில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, சிறையில் நட்பாகப் பழகி வந்த தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவியான அதிதி சிங்கிடம் ரூ. 200 கோடியை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்தாக கூறப்படுகிறது. இந்த வழக்குக்காகவும் சுகேஷ் சிறை தண்டனை பெற்றதாகக் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உணவக ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை!

விபத்தில் சிக்கிய ஏடிஎம் வாகனம்

நாளைய மின்தடை

நுகா்வோர் வழக்குகளுக்கு தீா்வு காண்பதில் தமிழகம் முன்னணி: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT