ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் அமைச்சர் நாரா லோகேஷ் குடும்பத்துடன் புனித நீராடல்  ANI
இந்தியா

மகா கும்பமேளா: ஒரே நாளில் 1.36 கோடி பேர் புனித நீராடல்!

புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியை கடந்தது!

DIN

பிரயாக்ராஜ் : மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் நேற்று(பிப். 17) ஒரே நாளில் 1.36 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டிவிட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை(பிப். 17) வரையிலான நிலவரப்படி, கும்ப மேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் கலந்துகொண்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கை 54.31 கோடியைக் கடந்துள்ளது என்று உத்தரப் பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில்(இரவு 8 மணி நிலவரப்படி), 1.36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT