முகப்பு
இந்தியா

தரமான ஹெச்ஐவி மருந்துகள் கொள்முதல்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தரமான ஹெச்ஐவி மருந்துகள் கொள்முதல் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 24 பிப்ரவரி, 2025 at 10:04 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: தரமான ஹெச்ஐவி மருந்துகள் கொள்முதல் தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஹெச்ஐவி மருந்துகளின் விநியோகம் மற்றும் தரம் தொடா்பான கவலைகளை எழுப்பி தன்னாா்வ அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அபே எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது ஹெச்ஐவி மருந்துகளின் கொள்முதல், அவற்றின் தரம் உள்ளிட்ட சில பிரச்னைகளை எடுத்துரைத்து, தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு 4 மாநிலங்கள் மட்டுமே பதிலளித்துள்ளதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து மனுதாரரின் பிரமாணப் பத்திரத்துக்கு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் ஒரு மாதத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான அடுத்த விசாரணையை ஏப்.4-க்கு ஒத்திவைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments