அசாதுதீன் ஓவைசி 
இந்தியா

தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்சாட்டு!

தில்லி ஆம் ஆத்மி அரசு மீது மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு.

DIN

தில்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதாக ஆம் ஆத்மி அரசு மீது மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக இன்று பேசிய அசாதுதீன் ஓவைசி, “தில்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒட்டுமொத்த தில்லியின் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. மருத்துவமனைகளோ பள்ளிகளோ முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்படுவதில்லை. அந்தப் பகுதிகளில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளில் எத்தனை வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன? அரசு திட்டங்களில் முஸ்லிம்களுக்கான பங்கு என்ன? என்று தெரிந்துகொள்ள ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டு இரு விண்ணப்பங்களை நான் தாக்கல் செய்துள்ளேன். ஆம் ஆத்மி அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி. தேர்தலுக்கு முன்னர் மட்டுமே அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

பாஜகவின் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் என்பது வாக்காளர்களின் விருப்பத்திற்கு மாறானது மட்டுமல்ல. அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று அவர் தெரிவித்தார்.

2020 சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 62 இடங்களை வென்றது. முன்னதாக, 2015 சட்டப்பேரவை தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.

15 ஆண்டுகள் தொடர்ச்சியாக தில்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி கடந்த இரு சட்டப்பேரவை தேர்தல்களில் எந்த இடத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் குரலில் நடக்கும் மோசடி! | AI Voice Cloning மோசடி நடப்பது எப்படி? | Cyber Shield

தெரியாமல் அனுப்பப்படும் பணம்! | UPI APP-கள் மூலம் மோசடி! | Cyber Security | Cyber Shield

“அவசர KYC புதுப்பிப்பு!”: வங்கி அதிகாரி போல பேசி மோசடி! | Cyber Security | Cyber Shield

Loan App-ல் Contact & Media Permission எதற்கு? Loan App Scam! | எளிய கடன் மோசடி! | Cyber Shield

மெயில் மூலம் நடக்கும் புதிய மோசடி! நீதிமன்ற LOGO, கையெழுத்து! ஏமாற வேண்டாம்!

SCROLL FOR NEXT