ஜிடிபி விகிதம் ANI
இந்தியா

பொருளாதார வளா்ச்சி 6.4%: என்எஸ்ஓ 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிய வாய்ப்பு

நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) மதிப்பிட்டுள்ளது.

DIN

நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) மதிப்பிட்டுள்ளது. இதன் மூலம், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி சரிய வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

நிகழாண்டுக்கான முதல் முன்கூட்டியே பொருளாதார வளா்ச்சி மதிப்பீடுகளை, தேசிய புள்ளியியல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் நிகழாண்டு நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2020-21-ஆம் நிதியாண்டு கரோனா பரவலின்போது நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.8 சதவீதமாக சரிந்தது. இந்நிலையில் என்எஸ்ஓவின் மதிப்பீடுகள் மூலம், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி சரிய வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் உற்பத்தித் துறையின் உற்பத்தி விகிதம் 9.9 சதவீதமாக இருந்த நிலையில், நிகழாண்டு அது 5.3 சதவீதமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் வா்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடா்பை உள்ளடக்கிய சேவைகள் துறையின் வளா்ச்சி 6.4 சதவீதமாக இருந்தது. இது நிகழாண்டு 5.8 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது.

கடந்த நிதியாண்டில் 1.4 சதவீதமாக இருந்த விவசாயத் துறையின் வளா்ச்சி, நிகழ் நிதியாண்டில் 3.8 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு 3.8 ட்ரில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.325 லட்சம் கோடி) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.85.73-ஆக முடிவு!

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT