பிரதமர் மோடி| ஜெய்ராம் ரமேஷ் 
இந்தியா

பிரதமர் மோடிக்கு - 75.. டாலருக்கு - 86: காங்கிரஸ் விமர்சனம்!

பிரதமர் மோடி தலைமையில் டாலருக்கு நிகரான ரூபாய் சரிவுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று (ஜன. 13) ஒரே நாளில் 55 காசுகள் சரிந்து ரூ.86.59 காசுகளாக வணிகமானது. பங்குச் சந்தையில் உள்ளூர் முதலீட்டாளர்கள் இடையே நிலவிய எதிர்மறையான நிலை மற்றும் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணங்களாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?

இதனைக் கண்டித்து ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற போது அவருக்கு வயது 64. அப்போது டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.58.58 காசுகளாக இருந்தது. மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பைச் சுட்டிக்காட்டியே வாக்கு சேகரித்தார்.

2025 - 26 ல் நாட்டின் பணவீக்கம் 4.3% - 4.7% ஆக இருக்கும்: தகவல்

மேலும், அப்போது அவரின் வயது டாலரைவிட அதிகமாக இருப்பதாகவும் கேலி செய்திருந்தார். பிரதமர் மோடி இந்தாண்டில் 75 வயதை எட்டுவதற்குள் ரூபாய் மதிப்பு 86 ஆக சரிந்துள்ளது. இது தொடரும் பட்சத்தில் அவர் எடுத்த யுக்தியே அவருக்குப் பின்னடைவாகவும் மாறும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க ஒரு மணி நேரத்துக்கு ரூ.1.7 லட்சம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

SCROLL FOR NEXT