இந்தியா

தில்லி: தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கும் காங்கிரஸ்!

புதிய தேர்தல் வாக்குறுதிகளை தில்லி காங்கிரஸ் அறிவித்தது.

DIN

தில்லி பேரவைத் தேர்தலில் புதிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், மாதந்தோறும் ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை, ரூ. 25 லட்சம்வரையில் இலவச சுகாதாரக் காப்பீடு திட்டம், படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 உதவித் தொகை அளிப்பதாக முன்னரே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மேலும் புதிய தேர்தல் வாக்குறுதிகளை தில்லி காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. சிலிண்டரின் விலை ரூ. 500-க்கும், ரேசன் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. அதுமட்டுமின்றி, இலவச மின்சாரத் திட்டமாக 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த 2 அறிவிப்பினையும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப். 5 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப். 8 அன்று வெளியிடப்படவுள்ளன. இந்தத் தேர்தலில் முன்னணி கட்சிகளாக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தில்லியில் 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் தீா்க்கமான வெற்றிகளைப் பெற்ற ஆம் ஆத்மி இந்த தோ்தலிலும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

அதே சமயம், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லியில் ஆட்சியில் இல்லாத பாஜக, மீண்டும் ஆட்சிக்கு வருவதை நோக்கமாகக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களுக்கு போட்டியாக காங்கிரஸும் தில்லி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் இருவர் பலி!

தோளோடு தோள் நிற்கும் இந்தியா - ரஷியா! புதினுடனான சந்திப்பில் மோடி பேச்சு!

வட மாநிலங்களில் அடுத்த 24 - 48 மணி நேரங்கள் எப்படி இருக்கும்?

அஜித் - ஆதிக் படத்தின் அறிவிப்பு எப்போது?

ராகுல் காந்தியின் மனு: செப்.3ல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை!

SCROLL FOR NEXT