கேரளத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரை இன்று போலீசார் கைது செய்தனர்.
கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அடூர் பகுதி போலீசார் ஒன்பது வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் 4 பேரை இன்று கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டனர்.
சிறுமியின் பள்ளியில் குழந்தைகள் நலக் குழுவினர் நடத்திய ஆலோசனையின் போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
சிறுமி கொடுத்த தகவலின்படி சிறுமியின் நண்பர்கள், வகுப்பு தோழர்கள், உறவினர்கள் மற்றும் பலரால் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இந்த சம்பவங்கள் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளில் இதுவரை 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் விரைவில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் வி.ஜி. வினோத் குமார் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மேற்கொண்டு விசாரணைக்காக நூரநாடு போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 18 வயது தலித் சிறுமியை 5ஆண்டுகளுக்கும் மேலாக 59 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 57 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.