குழந்தையை காப்பாற்ற ஓடும் நபர்.  
இந்தியா

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபர்

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

DIN

13வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம், தாணே, டாம்பிவிலியில் கட்டடத்தின் 13வது மாடியில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை திடீரென கீழே விழுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பவேஷ் மத்ரே என்கிற நபர் அதனைக் கண்டார். உடனே வேகமாக ஓடிய அவர் குழந்தையை பிடிக்க முயன்றார்.

ஆனால் அவரால் பிடிக்க முடியவில்லை. அவருடைய கையில் பட்டு குழந்தை கீழே விழுந்தது. இதனால் அந்த குழந்தைக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. தற்போது இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. குழந்தையை காப்பாற்றிய பவேஷ் மத்ரேவை நிஜ வாழ்க்கையின் ஹீரோ என்று பாராட்டி வருகின்றனர்.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்

இதுகுறித்து பேசிய மத்ரே, நான் கட்டடத்தை கடந்து சென்று கொண்டிருந்தேன். குழந்தை கீழே விழுவதைக் கண்டதும் அதன் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தைரியத்தையும் மனித நேயத்தையும் விட பெரிய மதம் எதுவும் இல்லை என்றார். இதனிடையே குடிமை அதிகாரி ஒருவர் மத்ரேவின் துணிச்சலைப் பாராட்டினார்.

மத்ரேவின் வீரச் செயலுக்காக பொதுவில் அவரை கௌரவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT