பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான்  Express
இந்தியா

வரலாற்றில் அட்டூழியங்கள் படித்தவர்களால் செய்யப்பட்டவை: பிகார் ஆளுநர்

கல்விச் சிந்தனை அரங்கில் பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பேசியது...

DIN

வரலாற்றின் மிக மோசமான அட்டூழியங்கள் படித்தவர்களால் செய்யப்பட்டவை என்று பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ’கல்விச் சிந்தனை அரங்கு 2025’ இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ’இந்திய கல்வியில் ஒழுக்கத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஆரிஃப் முகமது கான் பேசியதாவது:

“மனித குலத்தின் தெய்வீகம் என்பது மதம், இனம், சிந்தனை என அனைத்து வேறுபாடுகளையும் ஏற்றுக்கொள்வது.

ஒழுக்கமின்மையால் மக்கள் விவேகம் இழந்து சீரழிய வாய்ப்புள்ளது. வரலாற்றில் மிக மோசமான அட்டூழியங்கள் படித்தவர்களால் செய்யப்பட்டவை.

மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, நமது செயல்களைப் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பேசும்போது, ​​கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக நமது குரல் ஒலிக்க வேண்டும்.

ஒருமைப்பாட்டால் வரையறுக்கப்பட்டது இந்திய நாகரிகம். பன்முகத்தன்மையை இயற்கையின் விதியாகவும் நாம் கருதுகிறோம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT