யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி.. 
இந்தியா

கும்பமேளா கூட்ட நெரிசல்: நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

கும்பமேளா கூட்ட நெரிசல் பற்றி நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர் மோடி..

DIN

கும்பமேளா கூட்ட நெரிசல் பற்றிய நிலைமையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன.13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

செவ்வாய்க்கிழமையன்று (மாலை நிலவரப்படி) 4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா். மௌனி அமாவாசையான இன்று (ஜன.29) ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று ஒரே நாளில் 10 கோடி பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருவார்கள் என எதிர்பார்த்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்ததையடுத்து, புனித நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படும் நிலையில், 30 க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்து மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஆதித்யநாத்துடன் இதுவரை இரண்டு முறை பேசியுள்ளதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு-19 பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி.யை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

நமது கருத்து மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது: மோகன் பாகவத்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு! எங்கே? எப்படி?

காந்தி பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

நெருப்பில் குளிக்கும் தெய்வம்... காந்தாரா சாப்டர் - 1 திரை விமர்சனம்!

SCROLL FOR NEXT