இந்தியா

செளதி அரேபியா: விபத்தில் 9 இந்தியர்கள் பலி!

செளதி அரேபியாவில் 9 இந்தியர்கள் பலியானது பற்றி...

DIN

செளதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்த தகவலை செளதி அரேபியாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதி செய்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளது.

செளதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜிசான் அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அடுத்தகட்டப் பணிகளை தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 8002440003, 0122614093, 0126614276, 0556122301(வாட்ஸ்அப்) ஆகிய உதவி எண்களை தூதரகம் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அனைத்து உதவிகளையும் செய்து தர தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு! உள் துறையை விட்டுக்கொடுத்த நிதீஷ் குமார்

Mask movie review - சாலிகிராமத்தின் Money Heist! | Kavin

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

சித்தராமையாவின் ஆட்சியை ராகுல் உறுதி செய்ய வேண்டும்: பாஜக சவால்!

பாகிஸ்தான்: ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 15 பேர் பலி

SCROLL FOR NEXT