சஞ்சீவ் அரோரா  Pic: Vice-President of India/X
இந்தியா

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ராஜிநாமா: கேஜரிவால் போட்டியிட வாய்ப்பு?

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் ராஜிநாமா பற்றி...

DIN

ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அண்மையில், பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் அரோரா வெற்றிபெற்ற நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

இதனால், மாநிலங்களவை எம்.பி. தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் போட்டியிடுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை கேஜரிவால் மறுத்துவிட்டாா்.

பஞ்சாப் மாநிலத்திலிருந்து கடந்த 2022, ஏப்.10-இல் முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக சஞ்சீவ் அரோரா தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் 2028, ஏப்.9 வரை உள்ளது. பஞ்சாபில் நடைபெற்ற இடைத்தோ்தலில் போட்டியிட்ட அவா் காங்கிரஸ் வேட்பாளரான பரத் பூஷணை 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

இதையடுத்து, எம்எல்ஏவாக பதவியேற்கவுள்ள அவா் மாநிலங்களவை எம்.பி. பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஏற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரத் மாதா கி ஜெய்... பாகிஸ்தானுடன் விளையாட மறுத்ததுக்கு இந்தியா விளக்கம்!

Kavin பெற்றோருக்கு Kanimozhi, KN Nehru நேரில் ஆறுதல் | DMK

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

தண்ணீர் தொட்டியில் மூழ்கி காட்டு யானை பலி!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 40,500 கன அடியாக சரிவு!

SCROLL FOR NEXT