கோப்புப் படம் 
இந்தியா

ஹிமாசல் மேகவெடிப்பு: கனமழை, வெள்ளத்தால் ஒருவர் பலி! 12 பேர் மாயம்!

ஹிமாசலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.

DIN

ஹிமாசல பிரதேசத்தில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதில் ஒருவர் பலியானதுடன், 12 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மண்டி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) மாலை முதல் சுமார் 216.8 மி.மீ. அளவிலான மழை பெய்திருப்பது பதிவாகியுள்ளது. இதையடுத்து, அம்மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், கர்சோக் பகுதியில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 12-13 பேர் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், சையாஞ்சு பகுதியில் வசித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் மாயமானதாகத் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் ஏராளமானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மண்டி மாவட்டத்தின் ஏராளமான கால்நடைகள், வாகனங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், அங்குள்ள பல கிராமங்களின் வீடுகள் மற்றும் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், மாவட்டத்தின் அனைத்து ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. மேலும், பண்டோஹ் அணையின் நீர்மட்டம் 2,922 அடிக்கு உயர்ந்துள்ளதால், அணையிலிருந்து பியேஸ் ஆற்றுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மண்டி மற்றும் ஹமிர்பூர் மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், இன்று (ஜூலை 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தின் சம்பா, ஹமிர்பூர், மண்டி, ஷிம்லா, சிர்மவூர் மற்றும் சோலன் ஆகிய மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணிநேரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவுடன் தொடர்புடைய மியூல் கணக்கு மோசடி கும்பல் கைது!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்!

நிலச்சரிவால் இடிந்த வீடு! 3 பேர் உயிரிழப்பு! | Darjeeling | Landslide | Rain

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவத் தயார்: அஸ்ஸாம் முதல்வர்!

குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி

SCROLL FOR NEXT