ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து திருப்பதி நோக்கிச் சென்ற ஹிசார் விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
திருப்பதி ரயில்நிலையத்துக்கு அருகே ஹிசாரிலிருந்து இருந்து திருப்பதி சென்ற ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெட்டிகள் முழுவதுமாக எரிந்து நாசமானது.
ரயில் பெட்டிகளில் பரவிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
ஹிசார் விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் பற்றிய தீ மளமளவென அடுத்தப் பெட்டிக்கும் பரவியது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த நிலையில், தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த ரயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்ததை அறிந்த ரயில்வே அதிகாரிகள், உடனடியாக ரயில் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்து, தீ விபத்து நிகழ்ந்த ரயிலுக்கு முன்னதாகவே, வந்தே பாரத் ரயிலை நிறுத்தினர். இதனால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை, அரக்கோணம் அருகே, சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து நேரிட்டு, சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் திருப்பதியில் ரயிலில் தீ பரவியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.