அமர்நாத் யாத்திரையில் விபத்து: பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை!
அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்து: பக்தர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள அமர்நாத் புனித தலத்துக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற ஒரு பேருந்து இன்று(ஜூலை 22) பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து பக்தர்கள் காயமடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினரால் பேருந்திலிருந்த பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பக்தர்கள் படுகாயமடைந்திருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ’கேலா மோர் சுரங்கம் - டி2 ’ வழியாக அந்த பேருந்து இயக்கப்பட்டபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
A bus carrying Amarnath Yatra pilgrims met with an accident in the Kela Morh Tunnel-T2 on Jammu-Srinagar National Highway
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.