ஜகதீப் தன்கருடன் பிரதமர் மோடி.  ( படம் | vice president of india)
இந்தியா

ஜகதீப் தன்கர் உடல்நலம் பெற வாழ்த்துகள்! - பிரதமர் மோடி

ஜகதீப் தன்கர் உடல்நலம் பெற வாழ்த்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜகதீப் தன்கர் உடல்நலம் பெற வாழ்த்துகள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி, ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு ஜகதீப் தன்கர் திங்கள்கிழமை இரவு கடிதம் அனுப்பினார். மேலும், அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ராஜிநாமாவை ஏற்க வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜகதீப் தன்கர் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பதவி விலகியதால், அவர் நலம் பெற வேண்டி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஜகதீப் தன்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Prime Minister Narendra Modi has expressed his best wishes for Jagdeep Dhankhar's recovery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

SCROLL FOR NEXT