2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, 2019 முதல் 2023 வரை யானைத் தாக்குதல்களில் மொத்தம் 2,869 பேர் பலியாகியுள்ளனர்.
நாட்டில் அதிகபட்சமாக ஒடிசாவில் 624 பேரும் அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் 474 பேர், மேற்கு வங்கம் 436 பேர், அசாம் 383பேர் மற்றும் சத்தீஸ்கர் 303 பேர் பலியாகியாகியுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
யானை தாக்குதல்களால் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
2019-20 ஆம் ஆண்டில் 595 ஆக இருந்த பலி எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 629 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் யானை தாக்குதல்களால் முறையே 256 மற்றும் 160 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம், 2020 மற்றும் 2024க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.