கனரா வங்கி 
இந்தியா

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்தது கனரா வங்கி.

DIN

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் கணக்குகளில் வைத்திருப்பது கட்டாயம். குறைந்தபட்ச இருப்புத் தொகையானது வங்கி கணக்கின் தன்மை மற்றும் வங்கி இயங்கும் பகுதியை பொறுத்து ரூ. 1,000 முதல் நிர்ணயிக்கப்படுகிறது.

கனரா வங்கி வாடிக்கையாளர்களை பொறுத்தவரை தங்கள் சேமிப்புக் கணக்குகளில் நகர்ப்புறக் கிளைகளில் ரூ.2,000, நகரக் கிளைகளில் ரூ.1,000, கிராமப்புறக் கிளைகளில் ரூ.500 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த தொகையை பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களுக்கு அபராதக் கட்டணங்கள் விதிக்கப்பட்டு வந்தன.

மகாராஜா இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் திரைக்கதையாளர்!

இந்த நிலையில் ஜூன் 1, 2025 முதல், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதி அனைத்து சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

SCROLL FOR NEXT