கோப்புப் படம் 
இந்தியா

மங்களூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மங்களூரில் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

DIN

கர்நாடக மாநிலம் மங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மங்களூரின் உல்லால் தாலுக்காவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, இன்று (ஜூன் 4) செல்போன் மூலம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் உள்பட அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய்களின் உதவியோடு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தச் சோதனைகளின் முடிவில், அங்கு சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்மூலம், அந்த மர்ம நபரின் மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து, கொனாஜே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இத்தகைய செயலானது தண்டிக்கப்படக்கூடிய குற்றம் எனவும், பொது மக்களுக்கு தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கர்நாடக காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத்துடன், மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது, கேரளத்துடன் எல்லையைப் பகிரும் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் முக்கிய மருத்துவ நிறுவனங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் ராணுவத்தை விஞ்சிய ராகுல்: பாஜக விமர்சனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT