கரோனா பாதிப்பு 
இந்தியா

குஜராத்தில் 461 ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு!

உச்சத்தில் கரோனா.. அதிக பாதிப்பில் மூன்றாவது இடத்தில் குஜராத்...

DIN

குஜராத்தில் ஒரே நாளில் 64 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 461 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், நாளுக்குநாள் பாதிப்பும் அதிகரித்து வருகின்றன. அதிலும் தில்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 461 ஆக உயர்ந்துள்ளதையடுத்து 20 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் 441 பேர் வீடுகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

அகமதாபாத்தில் அதிகபட்சமாக 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு 76 ஆக இருந்த பாதிப்பு, தற்போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 37 வயது பெண் ஒருவர் அசர்வா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் 2 ஆண்கள், ஒரு பெண் மற்றும் எட்டு மாத பெண் குழந்தை உள்பட நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு கேரளத்தில் (1,416), மகாராஷ்டிரம் (494) முறையே குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளன. அதைத் தொடர்ந்து தில்லி (393) மற்றும் மேற்கு வங்கம் (372) ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக அகமதாபாத் போன்ற நகர்ப்புற மையங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது மற்றும் உள்ளூர் சுகாதார கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கண்காணித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வீட்டில் பதுக்கிய 2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.1.50 லட்சம், பொருள்கள் திருட்டு

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை, கரைக்கும் நீா் நிலைகள்: ஆக. 22-க்குள் தெரிவிக்கலாம்

SCROLL FOR NEXT