கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு. 
இந்தியா

கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்களை மூட உத்தரவு.

DIN

பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அகமாதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி முதல் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்றிரவு முதலே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

அலுவலக வேலைநாளில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்ததால் கட்டுக்கடங்காத அளவில் மக்கள் கூடியுள்ளனர்.

ஆர்சிபி ஆணியை காண வேண்டும் என்ற ஆசையில் மைதானத்தை சுற்றி ஆர்சிபி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததில், கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எம்ஜி ரோடு, ட்ரினிட்டி மெட்ரோ, சின்னசாமி திடல், விதான் சௌதா, கப்பன் பூங்கா உள்ளிட்ட 5 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

5000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு மக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் உள்ளனர்.

இதையும் படிக்க: கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கும் விழி... தர்ஷா குப்தா

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

கனவே கலையாதே... ஸ்ரவந்தி சொக்கராபு

தனிமையே... ரிச்சா ஜோஷி

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

SCROLL FOR NEXT