ராகுல் காந்தி (கோப்புப் படம்)
இந்தியா

உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல! - ராகுல்

உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல என ராகுல் காந்தி தெரிவித்திருப்பதைப் பற்றி...

DIN

மனித உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு அணி கோப்பை வென்றதால், பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் லேசான தடியடியில் ஈடுபட்டனர்.

பாராட்டு விழாக் கூட்ட நெரிசலில் சிக்கியதில் ஒரு பெண் உள்பட 11 பேர் பலியாகியுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆளும் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பற்ற தன்மையே இந்த பலிக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி இரங்கல்

இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில், “பெங்களூரு சின்னசாமி திடல் அருகே ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் மனதை உடைக்கிறது.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்.

இந்தத் துயரமான நேரத்தில், பெங்களூரு மக்களுடன் நான் துணை நிற்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கர்நாடக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். உயிரைவிட எந்தக் கொண்டாட்டமும் முக்கியமானதல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! - பிரதமர் மோடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவதை பார்க்கும் நேரம்... ராஷி சிங்!

பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? ராமதாஸ் உறுதி!

ஆடி போனா ஆவணி... அனசுயா!

தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT