குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 
இந்தியா

கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்: முர்மு

சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது, நமது கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்

DIN

புது தில்லி: சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை தெரிவித்தார்.

உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கிரகத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தவும், வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடத்தையை ஊக்குவிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், "சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது, நமது கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்" என்று முர்மு கூறியுள்ளார்.

தீவிர முயற்சிகளை மேற்கொள்க: பிரதமர் மோடி

உலக சுற்றுச்சூழல் நாள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

உலக சுற்றுச்சூழல் நாளில், நமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கும் நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கும் நமது முயற்சிகளை மேம்படுத்துவோம்.

நமது சுற்றுச்சூழலை பசுமையாகவும் சிறப்பாகவும் மாற்ற பாடுபடும் அனைவருக்கும் பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

1973 முதல் "ஒரே ஒரு பூமி" என்ற முழக்கத்தின் கீழ் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. இது சுற்றுச்சூழல் தொடர்பானவைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான மிகப்பெரிய உலகளாவிய தளமாக மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட இந்தியாவில் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு: ஜப்பான் பிரதமா் இரங்கல்

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

தஞ்சாவூா் மாநகரில் ஆக.19-ல் மின் தடை

போதை மாத்திரை விற்ற மூவா் கைது

இளைஞா் கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT