பிரதிப் படம் ENS
இந்தியா

பெண்கள் குறைவான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்! மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

பெண்கள் குறைவான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா அறிவுறுத்தல்

DIN

பெண்கள் குறைவான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா கூறியுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் இந்தூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா சென்றிருந்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மேற்கத்திய நாடுகளில் ஒரு பழமொழி உள்ளது. சிறு ஆடை அணிந்த ஒரு பெண் அழகாக இருப்பதைப்போல, தலைவர்களும் சிறு உரையாற்றுவதுதான் அழகு என்று வெளிநாடுகளில் கூறுவர். ஆனால், இது ஏற்கத்தக்கதல்ல.

வெளிநாடுகளில் பெண்கள் குறைவான ஆடைகளை அணிவதுதான் நல்லது என்று நினைக்கின்றனர். இப்போது, நம் நாட்டு பெண்களும் வெளிநாட்டுச் சிந்தனையோடுதான் இருக்கின்றனர்.

மத்திய அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா

இந்தியாவில் பெண்களை தெய்வத்தின் வடிவம் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் நல்ல ஆடைகளை அணிய வேண்டும். நம் நாட்டில் ஒரு பெண் நல்ல மற்றும் அழகான ஆடைகளை அணிந்து, நல்ல ஒப்பனை செய்து, நகைகளை அணிந்தால் மட்டுமே, அவரை மிகவும் அழகாக கருதுவர்.

பெண்கள் குறைவான ஆடைகளை அணிவது எனக்கு பிடிக்காது. என்னுடன் செல்ஃபி எடுக்க முயலும் பெண்கள் நல்ல ஆடைகளை அணிந்துகொண்டு தான் செல்ஃபி எடுக்க வர வேண்டும் என்றும் நான் வலியுறுத்துவேன் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

73 பயனாளிகளுக்கு ரூ 75.74 லட்சம் நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

வீராபுரத்தில் பேருந்து நிறுத்தம்: ஆட்சியா் உறுதி

சக்தி விநாயகா் கோயிலில் பொது விருந்து

பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்மானம்

SCROLL FOR NEXT