குரங்கு.  கோப்புப்படம்.
இந்தியா

உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பறித்துச் சென்ற குரங்கு !

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பறித்துச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது.

DIN

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பறித்துச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர், அலிகாரில் இருந்து தனது குடும்பத்தினருடன் பிருந்தாவனத்திற்கு வந்தார். அவரது மனைவியின் பையில் கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்தன.

தாக்குர் பாங்கே பிஹாரி கோயிலில் இருந்து திரும்பி வரும்போது, ​​குரங்கு ஒன்று அவரிடமிருந்து பையைப் பறித்துச் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பக்ரீத் அன்றும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 34 பேர் பலி!

உள்ளூர்வாசிகள் குரங்கிடமிருந்து பணப்பையை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. அதைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு புதரில் இருந்து பணப்பையை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பணப்பையில் இருந்த நகைகள் அப்படியே இருப்பது கண்டறியப்பட்டு, அது குடும்பத்தினரிடம் திருப்பி அனுப்பப்பட்டது. சதரின் வட்ட அதிகாரி சந்தீப் குமார், இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

மேலும் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் பறிக்கப்பட்ட பணப்பை மீட்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

Dinamani வார ராசிபலன்! | Aug 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒன்பது முக்கிய அறிவிப்புகள்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

SCROLL FOR NEXT