ENS
இந்தியா

சாலைகளில் பள்ளம்! ஏஐ மூலம் சரிசெய்ய அரசு முயற்சி

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

DIN

நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது இந்தியாவில் உள்ள 1,50,000 கிலோமீட்டருக்கும் (2024 நிலவரப்படி) அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் முயற்சியையும் அரசு முன்னெடுத்துள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் எங்கெல்லாம் சாலைகளில் பள்ளங்கள், விரிசல்கள், தேய்மானம், வெள்ளைநிறக் குறியீடுகள் அழிப்பு, சட்டவிரோத வாகன நிறுத்தம், அதிகாரபூர்வமற்ற அறிவிப்பு பலகைகள், சேதமுற்ற அறிவிப்பு பலகைகள், தெருவிளக்குகள், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை கண்டறிய முடியும்.

இவை தொடர்பான விடியோ ஆதாரங்களை நெடுஞ்சாலைத் துறைக்கு அனுப்பி, தீர்வு காணப்படும். தேசிய அளவில் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, தென்மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் முதல்கட்டமாக, 38,102 கிலோமீட்டர் நீளத்துக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கண்காணிப்பு வசதிகள் செயல்படுத்தப்படவுள்ளன.

தமிழகத்தில் மட்டும் 8,400 கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படுத்தப்படவுள்ளன.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுகாதார ஆய்வாளா் தோ்வு முறைகேடு: விசாரணை முடியும் வரை பணி நியமனம் இல்லை!

ஐபி பல்கலைக்கழகத்தில் 24 புதிய படிப்புகள் அறிமுகம்; பிப்.2 முதல் இணையதள விண்ணப்பங்கள் தொடக்கம்

கொடைக்கானலில் அறிவிக்கப்பட்டதைவிட அதிக நேரம் மின் தடை: பொதுமக்கள் அவதி!

ஆத்தூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சா் இ. பெரியசாமி

கண்ணமங்கலத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

SCROLL FOR NEXT