குஜராத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆமதாபாத் விரைந்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை 50 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆமதாபாத் விரைந்துள்ளார். ஏற்கெனவே குஜராத் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் தொலைபேசியில் பேசிய நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு நேரடியாகச் செல்கிறார். அதேபோல மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவும் ஆமதாபாத் செல்கிறார்.
இதையும் படிக்க | குஜராத்தில் பயணிகள் விமானம் விழுந்தது! 240 பேரின் கதி என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.