ஆமதாபாத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது!
ஆமதாபாத்தில் மீண்டும் விமான சேவைகள் தொடங்கியது பற்றி...
ஆமதாபாத் விமான நிலையம் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.
அப்பகுதில் இருந்த மருத்துவக் கல்லூரியின் விடுதியின் மீது மோதியதில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் பலரும் விபத்தில் சிக்கினர்.
Advertisement
Advertisement
விமானம் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், 242 பயணிகள், விமான ஊழியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஆமதாபாத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக நாடு முழுவதிலும் இருந்து ஆமதாபாத் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், ஆமதாபாத் சென்றுகொண்டிருந்த விமானங்கள் அனைத்தும் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், விமான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, மாலை 4.05 மணிமுதல் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்கியதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.