மருத்துவ மாணவர் விடுதி -
இந்தியா

மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்த விமானம்! மருத்துவர்களின் நிலை?

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது விமானம் விழுந்ததால் மருத்துவர்களின் நிலை என்ன என்று குடும்பத்தினர் கவலை.

DIN

குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. விமானம் விழுந்தபோது, கட்டடமும் தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால், அதில் இருந்த மருத்துவர்களின் நிலை குறித்து குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி, மெகானி என்ற பகுதியில் இயங்கி வந்துள்ளது. இந்தக் கட்டடத்தின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், கட்டடத்தில் இருந்த சிலர் பலியானதாகவும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர் விடுதியில் இருந்த 20 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. விமானியிடமிருந்து வந்த அவசர அழைப்பு, ஆனால் பேசவில்லை! மே டே கால் என்றால்?

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், இன்று பகல் 1.44 மணிக்கு தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் விமானிகள், ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை 130 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் விவரங்கள வெளியாகியிருக்கிறது.

இதில், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் 19 முதல் 20 வயதுடைய இளைஞர்களாக இருப்பதால் அவர்கள் பெரும்பாலும், மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்தவர்களாக இருப்பர் என்றும் கருதப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்பட்டு மேலெழும்பியது. விமானம் புறப்பட்ட வேகம் தொடரவில்லை. மேலெழும்பவே விமானம் முடியாமல் வளைந்து, வேகமாக கீழே இறங்கியது. சற்று வினாடிக்கெல்லாம் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த விமானம் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்த நிலையில், விமானம் முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்ததும், விமானம் விழுந்த நேரத்தில், அந்தக் கட்டடம் முழுக்க தீப்பற்றி எரிந்ததாகவும் கூறப்படுகிறது.

மருத்துவர்களின் விடுதி மீது விழுந்த விமானத்தால் விடுதி கட்டடத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. விமானம் கட்டடத்தின் மீது விழுந்தபோது, மருத்துவர்கள் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான விமானம் மருத்துவர்கள் விடுதி மீது விழுந்ததால், அதிலிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் நிலை என்னவானது என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

மருத்துவ மாணவர் விடுதிக் கட்டடடப் பகுதியும் தீப்பிடித்து எரிவது பதிவான நிலையில், மருத்துவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT