விமான விபத்து... X
இந்தியா

204 பேரின் உடல்கள் மீட்பு! யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஆமதாபாத் காவல் ஆணையர்

ஆமதாபாத் விமான விபத்து பற்றி நகர காவல்துறை ஆணையர் தகவல்..

DIN

ஆமதாபாத் விமான விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகீசியர், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியின் மீது விமானம் விழுந்ததில் அங்கிருந்த மருத்துவ மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் பயணித்தவர்கள் இறந்த நிலையிலேயே இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆமதாபாத் கமிஷனர் ஜி.எஸ். மாலிக் இதுபற்றி கூறுகையில்,

"ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. தற்போது வரை 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 47 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்த நிலையில் அவரும் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

விமானத்தில் பயணித்த 242 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானம், மருத்துவ விடுதியின் மீது விழுந்ததால் அங்குள்ளவர்களும் உயிரிழந்துள்ளனர். விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். காயமடைந்த 25 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரீடம் தேவைப்படாத ராஜா! ஷாருக்கானை வாழ்த்திய கமல் ஹாசன்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கலையரசன்!

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: இந்தியா பேட்டிங்

“கரூர் சம்பவத்திற்கு ஒருவர்மட்டும் காரணமல்ல!” அஜித் கருத்துக்கு உதயநிதி பதில்! | TVK

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: 10 பயணிகள் காயம்

SCROLL FOR NEXT