ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அதில், தனது தொழில் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து இன்று பிற்பகல் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இதில், பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், போயிங் நிறுவனத் தலைவரை தொடர்புகொண்டு சிறந்த நிபுணர்களை ஆய்வுக்கு அனுப்ப கோரியுள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை, அரசின் அறிவிப்புக்கு காத்திருப்பதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவச் செலவு மற்றும் அனைத்து உதவிகளையும் டாடா குழுமம் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.