முகப்பு
இந்தியா

விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது

அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது.

Updated On : 15 ஜூன், 2025 at 11:10 AM
விஜய் ரூபானி
பகிர்:

அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது.

விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூபானியின் டிஎன்ஏ மாதிரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணிக்கு பொருந்தியது. இதையடுத்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரூபானியின் இறுதிச் சடங்கு ராஜ்கோட்டில் நடைபெறும் என்றும் அதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் தெரிவித்தார்.

இதற்கிடையில், டிஎன்ஏ சோதனை மூலம் இதுவரை 32 பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் 14 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உண்மையான ‘அப்பா’க்களுக்கு வாழ்த்துகள்- எடப்பாடி பழனிசாமி

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரிந்ததால், உள்ளிருந்தோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்தவர்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.