ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 
இந்தியா

மீண்டும்... ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: தில்லியில் பத்திரமாக தரையிறக்கம்!

கடந்த 36 மணி நேரத்தில், மொத்தம் 4 விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்

DIN

புது தில்லி: தில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் தில்லி விமான நிலையத்துக்கே திரும்பியது.

தில்லியிலிருந்து இன்று(ஜூன் 16) மாலை 4.25 மணிக்கு புறப்பட்ட விமானம் வானில் பறந்த சில நிமிடங்களிலேயே அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமானி தகவல் தெரிவித்ததையடுத்து அந்த விமானம் மீண்டும் தில்லியில் தரையிறக்கப்பட்டது.

அதன்பின் விமானத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு விமானத்தில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாததையும் பறக்க தயாராக இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து தில்லியிலிருந்து அந்த விமானம் பயணிகளுடன் இரவு 7.56 மணிக்கு ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றடைந்ததாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ’போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் திருப்பிவிடப்பட்டு தரையிறங்கிய நேரத்துடன் முடிவடைந்த கடந்த 36 மணி நேரத்தில், மொத்தம் 4 விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டும் அவசரமாக தரையிறக்கமும் செய்யப்பட்டிருக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. எனினும், அகமதாபாத் விமான விபத்து போன்ற பேரழிவு நிகழாமல் இருப்பதை விமான அதிகாரிகளும் பணியாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT