முகப்பு
இந்தியா

புணே: ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

புணே: ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்!

Updated On : 16 ஜூன், 2025 at 4:25 PM
புணே ஆற்றுப்பாலம் இடிந்த இடம்
பகிர்:

புணே: புணே மாவட்டத்தில் இந்திரயாணி ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) இடிந்து விழுந்ததில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றில் விழுந்தனர்.

இந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உள்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று புணே மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து திங்கள்கிழமை(ஜூன் 16) அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →