முகப்பு
செய்திகள்

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

நெசவாளர் குடும்பங்களுக்கு விஜய் அளித்த வாக்குறுதிகள் குறித்து....

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:10 PM
திருப்பூரில் விஜய் பிரசாரம் - யூடியூப் / தவெக
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:07 PM

நெசவாளர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்துள்ளார்.

நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் ரூ. 3000, நெசவாளர்களின் உற்பத்தி செலவை குறைக்க 50% மானியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement

பிரசாரத்தில் தவெக திட்டங்கள் குறித்து விஜய் பேசியதாவது:

அரசுக்கு சொந்தமான உலகளாவிய இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். முக்கிய நகரங்களில் தறி விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.

நிலையற்ற நூல் விலை, மின்சார சுமையை பகிர்ந்துகொள்ள கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 30,000 வழங்கும்.

summary

Tn Election 2026 Rs 10 Lakh Insurance for Weavers: Vijay's Promise

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.