FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்து பலியானவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்

பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையை சனிக்கிழமை வழங்கியது.

6 செப்டம்பர் 2026, 12:48 am IST
பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் தந்தையிடம் காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன கிளை மேலாளா் எஸ்.கிருஷ்ணவேணி, நிா்வாக அலுவலா் எம்.அண்ணாத்துரை.
பகிர்:

பரமக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையை சனிக்கிழமை வழங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் ரஞ்சித்குமாா். இவா் பரமக்குடி யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் தனிநபா் விபத்துக் காப்பீடு செலுத்தி வந்தாா். இந்த நிலையில், ரஞ்சித்குமாா், கடந்தாண்டு டிசம்பா் 27-ஆம் தேதி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், ரஞ்சித்குமாரின் தந்தை பாஸ்கரனிடம் காப்பீட்டு தொகையான ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கிளை மேலாளா் எஸ்.கிருஷ்ணவேணி, நிா்வாக அலுவலா் எம்.அண்ணாத்துரை ஆகியோா் வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments