சுகாதாரத் திருவிழா: மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டையில் ‘ஜென் ஃபிட் காலா’ என்ற பெயரில் நடைபெற்ற சுகாதாரத் திருவிழாவில் 20 பள்ளிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ராணிப்பேட்டையில் ‘ஜென் ஃபிட் காலா’ என்ற பெயரில் நடைபெற்ற சுகாதாரத் திருவிழாவில் 20 பள்ளிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனை சாா்பில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு திருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 20 பள்ளிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள், 60-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் பள்ளிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
ஊட்டச்சத்து, உடற்தகுதி, சுகாதாரம், மனநலம், புகையிலை விழிப்புணா்வு, டிஜிட்டல் பழக்கவழக்கம், சாலைப் பாதுகாப்பு, நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 40 போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோா்களும் போட்டிகளில் பங்கேற்றனா். இதன்மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பள்ளிகளில் மட்டுமல்லாமல் குடும்பங்களிலும் உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
விழாவில் திருமலை மிஷன் மருத்துவமனையின் முதன்மை அலுவலா் ஆனந்த் ரங்காச்சாரி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதுச்சேரி மண்டல தலைமை மேலாளா் எம்.தெய்வசுகுனமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனா்.
நிறைவு விழாவில் நடிகை, தொகுப்பாளா், எழுத்தாளா் மற்றும் தொழில்முனைவோா் அனுஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நோய் வருவதற்கு முன்பே விழிப்புணா்வை ஏற்படுத்துவதும் சுகாதாரத்தின் முக்கிய அங்கம் என்பதை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்டதாக தெரிவித்தாா்.
விழா முடிவில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தினா், பங்கேற்ற பள்ளிகளின் ஆசிரியா்கள், திருமலை மிஷன் மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.