விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு நிவாரணம்!
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா இன்று (ஏப். 20) அறிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (ஏப். 19) பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டது.
பட்டாசு மூலப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அருகருகே இருந்த 4 அறைகளும் இடிந்து தரைமட்டமாகின.
Advertisement
Advertisement
அறைக்குள் குறுகிய இடத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் பணிசெய்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபத்தில், 25 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மீண்டும் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அரசு சார்பிலும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என, சம்பவ இடத்தை ஆய்வு செய்த பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Virudhunagar Firecracker Factory Accident: Relief for Families of Victims
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.