ஏர் இந்தியா கோப்புப் படம்
இந்தியா

6 சர்வதேச விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா!

அமிர்தசரஸ் - லண்டன், தில்லி - துபை இடையே இயக்கப்படும் சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.

DIN

ஏர் இந்தியா நிறுவனம் இன்று 6 விமானங்களை ரத்து செய்துள்ளது. அமிர்தசரஸ் - லண்டன், தில்லி - துபை இடையே இயக்கப்படும் சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.

அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், போயிங் விமானத்தில் ஆய்வு மேற்கொள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது.

இந்த ஆய்வுப் பணிகள் காரணமாக ஒருசில விமானங்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது. அமிர்தசரஸில் இருந்து லண்டன் செல்லும் விமானமும், தில்லியில் இருந்து துபை செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது.

இதேபோன்று, பெங்களூரு - லண்டன், தில்லி - வியன்னா, தில்லி - பாரீஸ் மற்றும் மும்பை - சான்பிரான்சிஸ்கோ ஆகிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

விபத்துக்குப் பிறகு அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா பயணமும் ரத்து செய்யப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனம் பி 787-9 ட்ரீம்லைன்களை லண்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு இயக்குகிறது.

இதையும் படிக்க | எத்தியோப்பியா தலைநகர் - ஹைதராபாத் விமான சேவை துவக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்து கட்சிக் கூட்டம்! தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணிப்பு! | DMK | SIR

பிக் பாஸ் 9: இதுதான் உங்கள் தராதரமா? திவாகரை எச்சரித்த விஜய் சேதுபதி

இது எதிர்காலத்திற்கு ஆபத்து: நிவேதா பெத்துராஜ்

பிகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் மீன்பிடித்த ராகுல் காந்தி

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

SCROLL FOR NEXT