ஒடிஸா கடற்கரையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கோப்புப்படம்
இந்தியா

கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் கைது!

கடற்கரைக்குச் சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்...

DIN

ஒடிஸாவில் 10 இளைஞர்களால் கல்லூரி மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 பேரும் இன்று(ஜூன் 17) கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

ஒடிஸாவின் கஞ்சம் மாவட்டத்தில் 20 வயது நிரம்பிய இளம்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோபால்பூர் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது அருந்திவிட்டு திரிந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவியின் நண்பரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு, அந்த மாணவியை தனியாக இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இன்று 10 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிந்து கோபால்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த 10 பேரில், 7 பேர் இளம்பெண்ணைச் சுற்றி அரணாக நின்று கொண்டதாகவும், அதன்பின் மூன்று இளைஞர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பல முறை சீரழித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கும்பலில் இருந்த 4 பேர், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் என்பது வேதனைக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

பிரசித்திபெற்ற ஸ்ரீ செங்கழுநீரம்மன் ஆலய தேர்த் திருவிழா: தேரை வடம்பிடித்து இழுத்த ஆளுநர், முதல்வர்

2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர் மோடி

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

SCROLL FOR NEXT