உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 
இந்தியா

உ.பி: அக்பர்பூர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்! முதல்வர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் ஷ்ராவன் தம் பேருந்து நிலையம் என மாற்றப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 16) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்குள்ள அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் ஷ்ராவன் தம் பேருந்து நிலையம் என மாற்றப்படுவதாக அறிவித்தார்.

இந்தப் பெயரானது, ராமாயணத்தில் வரும் ஷ்ராவன் குமார் எனும் கதாபாத்திரத்தின் புகழைப் போற்றும் விதமாகச் சூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மறைந்த ஜெய்ராம் வர்மா என்பவரின் நினைவாக, தண்டா பேருந்து நிலையத்தின் பெயரும் ஜெய்ராம் வர்மா பேருந்து நிலையம் என மாற்றப்பட்டுள்ளது.

அம்பேத்கர் நகர் மாவட்டத்துக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், சுமார் ரூ. 1,184 கோடி மதிப்பிலான 194 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அந்த நிகழ்ச்சியில் 102 திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், 92 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதையும் படிக்க: திறக்கப்படுகிறது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம்! 80 ஆண்டுகளுக்குப் பின்! இனி தங்கம் விலை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடவுள் துகள்... சரண்யா ஷெட்டி!

ஓணம் சீசன்... ரவீனா தாஹா!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

முதல் ஒருநாள்: தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு; 131 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!

SCROLL FOR NEXT