கோப்புப் படம் 
இந்தியா

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 101மி.மீ. அளவிலான மழை பதிவாகியதாக ஜெய்ப்பூர் வானிலை ஆய்வு மையம் இயக்குநர் ராதேஷியாம் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தானின் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் பருவமழையானது ஒருவாரம் முன்னதாகத் தொடங்கியுள்ளதாக, அவர் கூறியுள்ளார். மேலும், அம்மாநிலத்தின் மற்ற இடங்களில் நேற்று (ஜூன் 17) முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், ராஜஸ்தானின் மத்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதாகவும்; இதனால், கிழக்குப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT