இண்டிகோ விமானம்  ANI
இந்தியா

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது பற்றி...

DIN

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விமானம் புறப்பட்டுச் சென்றது.

இந்த நிலையில், லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மீண்டும் தில்லிக்கே திருப்பிவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விபத்துக்கு பிறகு கடந்த 7 நாள்களில் அதிகளவிலான இந்திய விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் மேற்கொள்ளவது பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

கேதார்நாத் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு: மகாராஷ்டிர பக்தர் பலி

ரூ. 20 கோடியா? ஒரு ரூபாய்கூட வாங்கவில்லை: ஆமீர் கான்

பொங் அணையில் நீர் திறப்பால் இடிந்து விழுந்த 2 மாடிக் கட்டடம்! | Himachal Pradesh

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!

SCROLL FOR NEXT