கோப்புப் படம் ENS
இந்தியா

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை

DIN

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு சோதனைகள் நிலுவையில் இருந்தபோதிலும்கூட, அந்த விமானங்கள் இயக்கப்பட்டதாகக் கூறி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) எச்சரித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள வேண்டிய ஏர்பஸ் ஏ 320 ஜெட் விமானம், ஒரு மாதகாலம் ஆகியும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல், துபை, ரியாத், ஜெட்டா போன்ற சர்வதேச இடங்களுக்கு பயணித்தது தெரிய வந்தது.

மற்றொன்றாக, ஏர்பஸ் ஏ 319 விமானம், பாதுகாப்பு சோதனையில் 3 மாதங்களுக்கும் மேலாக உட்படுத்தப்படாமல், உள்நாட்டு வழித்தடங்களில் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இவைதவிர, மற்றொரு விமானமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படாதது தெரிய வந்தது.

இந்த விமானங்களில் அவசரகாலத்தில் தப்பிப்பதற்கான அவசர உபரணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்தது.

இவ்வாறு, பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தாமல், விமானத்தை இயக்குவது என்பது நிலையான விமானத் தகுதி மற்றும் பாதுகாப்புத் தேவைகளை மீறுவதாகும்.

இதையும் படிக்க: லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு மாநகரில் கனமழை: சாலைகளில் வெள்ளம்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

செப்.26 இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

SCROLL FOR NEXT