கோப்புப் படம் 
இந்தியா

தில்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதைப் பற்றி...

DIN

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.

இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் முதல் வட மாநிலங்கள் வரை பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

தில்லியில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 27 ஆம் தேதி தொடங்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்தாண்டு (2025) 3 நாள்களுக்கு முன்னதாக வரும் ஜூன் 24 ஆம் தேதியன்றே தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட்!

தில்லியின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருவதால், அம்மாநிலத்துக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வடக்கு அரபிக் கடல் பகுதி, ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தீவிரமடையக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரளம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலி

ஷாருக்கானை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்!

விஜய் பிரசாரத்தில் உயிரிழப்பு 13-ஆக உயர்வு? குழந்தைகள், பெண்கள் பலி?

கரூரில் விஜய்யே எதிர்பார்க்காத ‘திக்.. திக்... நிமிடங்கள்’ -பிரசாரத்தில் பெருந்துயரம்!

கரூரில் விஜய் பேச்சு! - Vijay full speech | Karur | TVK

SCROLL FOR NEXT