சூரிய மின்சக்தி file photo
இந்தியா

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் போட்டி: மத்திய அரசு

புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் ஒரு போட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

DIN

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.2.3 கோடி மதிப்பிலான பரிசுகளுடன் கூடிய புத்தாக்க நிறுவனங்களுக்கான போட்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் அல்லது கண்டுபிடிப்பாளர்கள் ரூ.2.3 கோடி மதிப்பிலான போட்டியில் இடம்பெறுவார்கள். இதில் முதல் பரிசுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் பரிசுக்கு ரூ.50 லட்சம், மூன்றாம் பரிசுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும், ஆறுதல் பரிசாக தலா 10 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடங்களின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளை பொருத்தும் பணியை விரைவுபடுத்தவும் விநியோகிக்கவும் ரூ.2.3 கோடி பரிசுத் தொகையுடன் கூடிய புதுமையான 'ஸ்டார்ட்-அப் போட்டியை' மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.

விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கும் நிலையில் கடைசி தேதி ஆகஸ்ட் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் முடிவுகள் செப்டம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.

வெறும் பரிசுத் தொகை மட்டுமல்லாமல், வெற்றியாளர்கள் புத்தாக்க நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கான ஆதரவு மற்றும் முன்னோடி திட்டங்களைத் தொடங்கி நடத்துவதற்கான வாய்ப்பு மற்றும் உரிமம் பெற்ற நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்று புத்தாக்க திட்டங்களுக்கு உரிமம் பெற்றுத்தரப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: பிரேமலதா விஜயகாந்த்

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

காதல் சடுகுடு... அனுபமா பரமேஸ்வரன்!

மாஸ்கோவில் ரஷிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் நாளை சந்திப்பு!

வசந்தமாய் வந்தவள்... வெண்பா!

SCROLL FOR NEXT